பிரபல நகைக்கடையில் நகை வாங்கியவருக்கு நடந்ததை பாருங்க !! இப்படிக்கூட ஏமாத்துவாங்களா ?? நகை வாங்கும்போது உஷார் மக்களே !!

நகை வாங்கப் போறீங்களா? நாலு கடையில் போய் பார்த்து விலையை கேட்டுட்டு இங்கே வாங்கன்னு விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்போம்.அந்த கடையில் ஒரு நபர் நகை வாங்கியிருக்கிறார். அதை அடகுக்கடையில் வைத்தபோது அது தூய்மையான தங்கம் இல்லை அதற்கு பணம் தரவே முடியாது எனவும் அடகுக்கடைக்காரர் திருப்பி அனுப்பியுள்ளார்.

   

இதனால் கடுப்பான வாலிபர் தன் மனைவி, கைகுழந்தையுடன் நகையை வாங்கிய அந்த பிரபல நகைக்கடைக்குப் போனார். அவர்களிடம் நகைபற்றி கேட்டபோது முதலில் அந்த நகைக்கடை ஊழியர்கள் ரொம்பவே தெனாவெட்டாக நகையை கொடுத்துட்டு போங்க…2 நாளில் அக்கவுண்டில் பணம் போடுகிறோம் எனச் சொன்னார்கள்.

தொடர்ந்து அந்த கடைக்கு உள்ளே வந்த வாலிபர் அங்கு இருந்தவாறு தாறுமாறாக சத்தம் போட்டார். அடுத்த 15 நிமிடத்தில் நகையை எடை போட்டனர். அது 112 கிராம் இருந்தது. அதே எடைக்கு தங்கக்காசுகளை வாங்கிச் சென்றார்.

இனிமே நகை வாங்கும்போது பிரபலமான கடை, நன்கு விளம்பரம் செய்யும் கடை என்பதாக மட்டும் பார்க்காமல் இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க பாஸ்…