பிரபல நடிகருடன் உடல் எடை மெலிந்து இருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்! ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. பெரும்பாலான வாரிசு நடிகர் நடிகைகள் சோபிக்காமல் போனாலும் சில நடிகர் நடிகைகள் தந்து தனித்துவமான நடிப்பினால் ஒரு தடம் பதிக்கின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை வரலட் சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து, தாரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார்.

அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மாறிவிட்டது. சர்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு கிடைக்காதா ரசிகர்களின் ஆதரவு, தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் படங்களுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேக், நாந்தி என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் வைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமார் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் உடல் எடை மெலிந்துபோய் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றமளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *