“நீ என்ன அரவிந்த்சாமி மாறி அவ்ளோ அழகா” என்ற வாக்கியம் ஒன்று போதும் நடிகர் அரவிந்த்சாமி மக்கள் மனதில் இடம் அந்த அளவிற்கு இடம் பிடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக 90களில் வலம் வந்தவர்.அரவிந்த் சாமி அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான தளபதி படத்தில் ரஜினி, மமூட்டி என முன்னணி நடிகர்கள் நடித்த அந்த படம் தான் இவரை பல மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
இவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வகையில் கடல் மற்றும் தனி ஒருவன் மூலம் வில்லனாக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.தனி ஒருவன் படத்தில் படு மாஸ் கேரக்டர்யில் நடித்து மக்களை கவர்ந்தார்.
இவர் கிட்டத்தட்ட 20படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து பல ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இருந்து வருகிறார்.இவர் தமிழில் ரோஜா, பாம்பே, மின்சார கனவு, என் சுவாச கற்றே போன்றபல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பரந்த இவர் பின்பு சினிமா துறையை விட்டு சிறுது காலம் நடிக்காமல் இருந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.இவரது நிறம் பற்றி பல படங்களில் வசனமாக இடம்பெற்றுள்ளது என்றே கூறலாம்.நடுவில் அவரை சினிமா பக்கமே காணவில்லை, இப்போது தான் மீண்டும் வலம் வருகிறார். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த படங்கள் பல வெற்றிப்பெற்று வருகின்றன.அதிலும் தனிஒருவன் படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.