பிரபல நடிகர் வினித் என்ன ஆனார்! அவரின் தற்போதைய நிலை என்ன? புகைப்படம் உள்ளே

தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான ஆவாரம்பூ என்ற படத்தில் சக்கரை என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார் நடிகர் வினித். இந்த சக்கரை கேரக்டர் இன்று வரை பேசப்படும் கேரக்டராகும். சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் நடித்த வினித் பரதநாட்டியம் ஆடி ரசிகர்களிடம் நல்ல பாராட்டைப் பெற்றார். 1984ஆம் ஆண்டு ‘இடனிலங்கள்’ என்ற மலையாள படத்தில் அறிமுகம் ஆனார்.

   

அதன்பின்னர், ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம், காதல் தேசம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி என கிறுக்கன், படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித். மேலும் 100கும் மேற்ப்பட்ட படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் இருந்துள்ளார் வினித். கடைசியாக கம்போஜி என்கிற மலையாள படத்தில் நடித்த வினித்திற்கு கடந்த 2004ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவருடக்கும் திருமணம் ஆனது.

இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. சில வருடங்களாக அவர் பற்றிய தகவல் பெரிதாக வெளியாக வில்லை. இந்நிலையில் அவரின் குடும்பப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 53 வயதாகும் நகர் வினித் இன்னும் இளமையாகவே இருப்பது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் வினித்.