புதியதாக BMW கார் வாங்கிய வெங்கடேஷ் பட்.. காரில் அட்டகாசம் செய்த குக் வித் கோமாளி 2 பிரபலங்கள்! வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. TRPயை விட மக்கள் மனதில் பெரிய இடத்தை நிகழ்ச்சி பிடித்துவிட்டது. வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

   

மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். கடந்த வாரம் அரைஇறுதி சுற்று நடந்தது, அதில் கனி, அஷ்வின், பாபா பாஸ்கர் என 3 பேரும் இறுதி போட்டிக்கு போட்டியிட தேர்வானார்கள். இந்த வாரம் வைல்ட் கார்ட்டு என்ட்ரீ, யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக எல்லாரும் இருப்பதால் நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவரும் வெங்கடேஷ் பட் அவர்கள் அண்மையில் புதிதாக BMW கார் ஒன்று வாங்கியுள்ளார். அந்த காரை தங்கதுரை வீடியோ எடுத்துள்ளார். அதோடு ரக்ஷன், புகழ், தங்கதுரை, பப்பு ஆகியோர் அந்த காரை வெங்கடேஷ் பட் ஓட்ட அவர்கள் பயணம் செய்கிறார்கள். வீடியோவும் வெளியாக வெங்கடேஷ் பட்டிற்கு மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.