செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் ஒரு படம் என்றாலே அது ரசிகர்களுக்கு ஸ்பெஷலான படம் தான். அவர்களது கூட்டணியில் வந்த படங்களில் புதுப்பேட்டை படம் தான் இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கல்ட் கிளாசிக் படமாக இருக்கிறது.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சினேகாவும் நடித்திருந்தார், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.முதன்முதலில் சினேகா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராமிற்கு தான் முதலில் கிடைத்துள்ளது.
ஆனால் படப்பிடிப்பு 6 மாதம் கழித்து தான் என கூறியதால் அவரால் நடிக்க முடியவில்லையாம். புதுப்பேட்டை படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் நமக்கு தெரியாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு புதுப்பேட்டை 2ம் பாகமும் தயாராக இருப்பது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான தகவல் தான்.