மணிமேகலையை வீட்டில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம்.. மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட பதிவு!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சமையலும், நகைச்சுவையும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஷகிலா, மதுரை முது, அஸ்வின், கனி என பலர் குக்காகவும் மற்றும் ஷிவாங்கி, பாலா, புகழ் போன்றோர் கோமாளிகளாகவும் உள்ளனர்.

   

இந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் தனித்து காமெடி செய்து ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனிப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் மணிமேகலை. இவர் தொகுப்பாளினியாக இருந்த நேரத்தை விட இப்போது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே கூறலாம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிகழ்ச்சியில் தான் பங்கு பெறப் போவதில்லை என மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இவருக்கு அண்மையில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது, அதாவது உடம்பில் அவர் சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டாராம். இதனை அவரே தனது சமூக வலைதளங்களில் அறிவித்தார், இதனால் சில எபிசோட் தன்னால் வர முடியாது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மணிமேகலையை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் ஷகீலா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் மணிமேகலை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)