கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா. எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர். சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர் நடிகை சித்ரா. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களையும் நேரில் சந்தித்து வந்தார்.
தைரியமாக பெண்ணாக இருந்த அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்திலும் சந்தோஷமாக தான் அவர் பதிவுகள் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஒரே இரவில் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் திடீரென மன கஷ்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
இதனால் சித்ரா ரசிகர்களுக்கு பெறும் சோகம். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் புகைப்படம் இருக்கும் இடத்தில் அவரது உறவினர்கள் அனைவரும் சித்ராவின் முகத்தை முகமூடியாக அணிந்து அவரது வீட்டில் புகைப்படம் எடுத்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் சித்ரா இதெல்லாம் பார்க்க முடியவில்லையே என கண்ணீர் வடிக்கின்றனர்.
View this post on Instagram