தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் கந்தன் கருணை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் 80-களில் முன்னணி நடிகையாக விளங்கினார். மூன்று முடிச்சி படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 நடிகை ஸ்ரீதேவி காலமானார்.
தமிழ் திரையுலகம் மற்றுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே கலக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, மும்பையிலே செட்டில் ஆனார். இவர்களுக்கு பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர், தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஷாக்காகி உள்ளது. ஆம், மிகவும் ட்ரான்ஸ்ப்ரண்ட் ஆன உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.