மாடர்ன் உடையில் அசத்தும் பாரதி கண்ணம்மா சீரியல் லட்சுமி பாப்பா! செம க்யூட்.. வைரலாகும் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

   

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பல மாதங்களாக டிஆர்பியில் இரண்டாம் இடத்தை பிடித்து வந்தது. இந்த சீரியல் ஆரம்பத்தில் கருப்பு நிற நாயகி என்கிற விளம்பரத்துடன் தான் தொடங்கியது, இப்போது அந்த கான்செப்டில் இருந்து டிராக் மாறியுள்ளது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். ஆனால் அதுபற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்நிலையில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஹேமா மற்றும் லட்சுமி. இதில் ஒருவர் பிரபல சீரியல் நடிகரின் மகள். அதாவது நடிகர் ஷியாமின் மகள் தான் லட்சுமியாக சீரியலில் நடிப்பவராம். அண்மையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shyam Viswanathan (@viswanathanshyam)