மாடர்ன் உடையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வைரலாகும் போட்டோ ஷுட் புகைப்படம்- இதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட குடும்ப தொடர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த சீரியல் உள்ளது, அடுத்தடுத்து சுவாரஸ்யமான கதைக்களமும் அமைந்து வருகிறது.

   

இந்நிலையில் தற்போது சித்ராவுக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இத்தொடரில் கதிர் முல்லையின் காதல் காட்சிகளுக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை சுஜிதா தமிழில் ‘பூவிழி வாசலிலே’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரில் அண்ணி என்ற முக்கிய வேடத்தில் குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார்.

இவர் இதே கேரக்டரில் தெலுங்கிலும் நடித்து வருகிறார். புடவையில் மட்டுமே இதுவரை நாம் இவரை சீரியலில் பார்த்து வருகிறோம். தற்போது இவர் மகளிர் தின ஸ்பெஷலாக மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதோடு செம மேக்கப்பும் போட்டிருக்கிறார், இதோ அவரது வேற லுக் புகைப்படம்…

 

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)