மாடர்ன் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய லொஸ்லியாவின் அம்மா… வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ஃப்ரெண்ட்ஷிப் உட்பட தொடர்ந்து சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய அம்மா மாடர்ன் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்பாவுக்கு பிறகு என்னிடம் எதையும் எதிர்பார்க்காம அன்பு செலுத்தும் ஒரே ஆள் நீ தான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.