மாஸ்டர் பட நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம்! ஷாக்கில் ரசிகர்கள்..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சுரேகா வாணி. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றவர் தான் சுரேகா வாணி. நடிகை சுரேகா வாணியின் முகத்தை பார்த்ததும் நம்மில் பலருக்கும் பார்த்த முகம் என்றே தோன்றும். சரிதானே, பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டரில் நடித்துள்ளார்.

   

தெலுங்கு சினிமா நடிகையான இவர் உத்தம புத்திரன், தெய்வ திருமகள், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சுரேகா வாணி.

இந்த நீக்கப்பட்ட காட்சி வெளியாகி அவருக்கு பாசிடிவ் விமர்சனமாக மாறி பட வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகிறதாம். 43 வயதாகும் நடிகை சுரேகா வாணி, பீர் பாட்டில் உடன், குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாஸ்டர் படத்தில் நடித்த நடிகையா இது என ஷாக்காகி உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்..