மிகவும் சிம்பிள்ளாக டீ-ஷர்ட், லுங்கியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. தீயாய் பரவும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

   

இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்தாலும் ரஜினியின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தது. இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு அண்மையில் இணைந்தார். இந்நிலையில் இப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினி அரிதான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது, அந்த வகையில் தற்போது ரஜினி தனது வீட்டில் டீ-ஷர்ட் மற்றும் லுங்கியில் செம சிம்பிள்ளாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..