மிகவும் வித்தியாசமான முறையில் விஜே சித்ரா நடத்திய போட்டோஷூட்!! வைரலாகும் அழகிய புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா. தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி, அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கியவர் வி.ஜே. சித்ரா. எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர். சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர் நடிகை சித்ரா.

   

படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களையும் நேரில் சந்தித்து வந்தார். கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. தைரியமாக பெண்ணாக இருந்த அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது. சித்ராவின் மறைவு அவரது ரசிகர்களையும், அவருடன் இணைந்து பணிபுரிந்து வந்த நடிகர், நடிகைகளையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகை சித்ரா எப்போது சுறுசுறுப்பாக பல வித்யசமான விஷயங்களை செய்பவர். அந்த வகையில் சித்ரா தனது மரணத்திற்கு முன் மிகவும் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோஷூட்டில் ஒரு புகைப்படத்தில் மூன்று சித்ராக்கள் இருக்கிறார்கள். ஆம் ஒரே புகைப்படத்தில் மிகவும் அழகான தோற்றத்தில் நடிகை சித்ரா போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..