மீண்டும் சீரியலில் நடிகை வாணி போஜன்..! வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் “தெய்வ மக்கள்” இதில் சத்யாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். அந்த சீரியல்லே இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார். இதன்பின் லட்சுமி வந்தாச்சு மற்றும் கிங்ஸ் ஆப் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் என சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்துக் கொண்டார் நடிகை வாணி போஜன்.

   

அதன் பிரபலத்தால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் தற்போது ஜொலித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குனர் இயக்கிய “ஓ மை கடவுளே” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்த இவரை பலரும் செல்லமாக மீரா அக்கா என்று அழைத்து வருகிறார்கள். தற்போது கைவசம் 5 படங்களை வைத்துள்ளாராம்.

முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் வாணி போஜன் நடிப்பில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மீண்டும் கலைஞர் டிவியில் மார்ச் 1ல் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் மீண்டும் வாணி போஜன் நடிப்பில் உருவான தெய்வமகள் சீரியல் ஒளிபரப்பாகிறது என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.