முதல் திருமணம் மூலம் 4 மகள்கள்.. இரண்டாவது கணவரை கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

ஹைதராபாத்தின் வனஸ்தாலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதீப் (38). இவர் மனைவி மரியதா (32). மரியதாவுக்கு முதல் திருமணம் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவரை விவாகரத்து செய்த பின்னர் மரியதா கடந்தாண்டு கங்காதீப்புடன் காதலில் விழுந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை மணந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 8ஆம் திகதி கங்காதீப் காணாமல் போனார், இது குறித்து கடந்த 24ஆம் திகதி அவரின் சகோதரர் ஆகாஷ் பொலிசில் புகார் அளித்தார்.

   

பொலிசார் கங்காதீப் வீட்டுக்கு வந்து வந்து அவர் மனைவி மரியதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சமாளித்து வந்த மரியதா ஒருகட்டத்தில் கணவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், என் இரண்டு மகள்களிடம் கங்காதீப் தவறாக நடந்து கொண்டார், இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. சம்பவத்தன்று கங்காதீப் மற்றும் அவர் நண்பர் சுனில் வீட்டில் மது அருந்தினார்கள். பின்னர் சுனில் கிளம்பி சென்றுவிட்டார், இதன் பிறகு என் கணவர் கங்காதீப் என்னிடம் சண்டை போட்டார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதன்பிறகு வீட்டுக்குள்ளேயே அவர் சடலத்தை புதைத்தேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து கங்காதீப்பின் சடலத்தை அழுகிய நிலையில் பொலிசார் கைப்பற்றினார்கள். மேலும் மரியதாவை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.