முன்னணி நடிகருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்த நயன்தாரா.. அந்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் என்னவோ காதல் சம்பந்தப்பட்ட படங்களாக நடித்தார். படத்தில் காதல் காட்சிகள், நடனம், சில காமெடி என இப்படியே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நயன்தாரா நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

   

இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த, மலையாளத்தில் நிழல் என மீதமுள்ள படங்களுக்கு படப்பிடிப்புகள் சென்றுகொண்டு இருக்கின்றன. நடிகை நயன்தாரா தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் இதுவரை உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம் படத்தில், நடிகை நயன்தாரா கதாநாகியாக நடிக்க, அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். மேலும் விக்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் சரியாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கன்ராஜுக்கு, கமல் ஹாசன் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கின்றனர்.