நடிகை அமலா பால் சீரியலில் நடிக்கப்போகிறாரா? முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்க்கு இப்படி ஒரு நிலைமையா..!

தமிழ் சினிமாவில் நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அமலா பால். இப்படம் அவருக்கு சினிமாவில் பெரிய திருப்பு முனையாக அமைந்து. பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. அதன்பிறகு ஜெயம் ரவி, அதர்வா, தனுஷ் என இளம் நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்தார்.

   

தலைவா, வேலையில்லா பட்டதாரி படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். தலைவா படத்தின் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தார். சில ஆண்டுக்கு பின் விவாகரத்தும் செய்தார். அதன்பிறகு மீண்டும் திரைப்படத்தில் கவனம் செலுத்திய அமலா பால் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார். ஆனால் முன்பு போல் தற்போது நடிகை அமலா பாலுக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான Pitta Kathalu வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அமலா பால் விரைவில் சீரியலில் நடிக்க போவதாக தகவல் சில தரப்பில் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும், விஜய், தனுஷுடன் இணைந்து கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கு இந்த நிலைமை என புலம்பி வருகின்றனர்.