மேடை நிகழ்ச்சியில் பேத்தியை கொஞ்சியபடி பாடல் பாடிய இளையராஜா.. வைரலாகும் அழகிய புகைப்படம்

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜா இசை என்றாலே இவர் பெயர் தான் முதலில் நியாபகம் வரும். எத்தனை ஹிட் பாடல்கள் வந்தாலும் இவரது பாடலுக்கு இணையே இல்லை. எத்தனை வருடம் கடந்தாலும் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

   

தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இசைஞானி இளையராஜா. தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர்இசைஞானி இளையராஜா. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். ​

படங்களில் இசையமைப்பது தாண்டி கச்சேரிகள் நடத்துவது வழக்கம். இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் சினிமா துறையே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியின் போது இளையராஜா பாடிக் கொண்டிருக்கும் போது யுவன் ஷங்கர் ராஜா தனது மகளை மேடைக்கு அழைத்து சென்றார். அப்போது இளையராஜா தனது பேத்தியை கொஞ்சியபடி பாடலும் பாடினார். அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம்,