மோசடி புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டல் விடுத்த ஆர்யா! ஆதாரத்தை வெளியிட்ட ஈழப்பெண்

ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றி பணமோசடி செய்தார் என இலங்கை தமிழ்ப்பெண் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்கும்படி விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70,40,000 பெற்றதாக தெரிகிறது.

பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மிரட்டியதாக ஒரு சாட்டிங்கை பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ளார்.

அதே போல திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து கேட்ட போதும் அப்பா எடுத்த முடிவு என்று நழுவிய ஆர்யா, எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நிறுத்தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *