மௌன ராகம் சீரியல் சக்தியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..!

தமிழ் சினிமாவிற்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களா அதேபோல சீரியல்களுக்கும் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய சீரியல் மெளன ராகம். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான ‘போட்டால் குமார் கான்வலா’ எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த சீரியல் கதையை தாண்டி இதில் நடித்த சின்ன குழந்தைகளுக்காகவே ஓடியது என்று கூறலாம்.

   

இதில் ஸ்ருதி, ஷக்தி என்ற பெயரில் இரண்டு சுட்டி குழந்தைகள் நடித்தார்கள். இரண்டு பேரும் மிகவும் அழகாக கியூட்டாக நடித்திருப்பார்கள். பின் சீரியலில் வந்த பாடல்கள், சில இப்போதும் ரசிகர்களால் பாடப்பட்டு வருகிறது. அவர்கள் இருவருக்காகவே சீரியல் ப டு ஹிட்டாக ஓடியது என்றே கூறலாம். முதல் சீனனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஷெரின் என்ற குழந்தையை விட கிருத்திகா என்ற குழந்தை அதிகம் பிரபலம். இப்போது கூட இவர் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். தற்போது முதன்முதலாக கிருத்திகாவின் அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் ஒரே டிசைனில் ஆடை அணிந்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இவ்ளோ அழகா இருக்கீங்களே என கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.