யூடுப் தளத்தின் முன்னணி நட்சத்திரம் பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்கப்போகிறாரா? யார் தெரியுமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதில் பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது நிலையில் அதனை தொடர்ந்து உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துகொண்டு இருக்கின்றனர். அதே போல் பிக் பாஸ் சீசன் 4 போல் இல்லாமல், கொஞ்சம் விறுவிறுப்பும், கொஞ்சம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

   

தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் இந்த முறை கமல் ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என பேசப்பட்டு வருகிறது. அதே போல் குக் வித் கோமாளி கனி, அஸ்வின், தர்ஷா, சிவாங்கி, நடிகர் ராதாரவி என பலரின் பெயர்கள் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்கள் பட்டியலில் கூறப்படுகிறது.

இந்நிலையில் Youtube பிரபலம் இனியன் என்பவரிடமும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும்படி பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இனியன் Youtube தளத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.