ரோட்டில் இருந்த மக்களிடம் வீட்டு முகவரியை கேட்டு சென்ற விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத அரிய வீடியோ இதோ!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். பல போராட்டங்களைக் கடந்து வந்து இன்று ரசிகர்களின் மனதில் தளபதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவரின் படங்கள் போஸ் ஆபிஸ் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

   

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய் தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரை வெளியே மக்கள் பார்த்துவிட்டால் போதும் உடனே கூட்டம் கூடிவிடுவார்கள்.

அப்படிபட்ட விஜய் ஒருகாலத்தில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு தனது பைக்கில் வெளியே ஊர் சுற்றியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ரோட்டில் இருந்த மக்களிடம் ஒரு முகவரி பற்றி கேட்டுவிட்டு பின் தன் வீட்டி முகவரியையே கேட்டுள்ளார். அதற்க அங்கிருந்தவர்கள் யாரோ ஒருவர் கேட்கிறார் என சாதாரணமாக பதில் கூறுகின்றனர். இதோ அந்த அறிய வீடியோ உங்கள் பார்வைக்கு…