ரோபோ சங்கரின் மனைவி சீயான் விக்ரம் படத்தில் நடித்துள்ளாரா? எந்த படத்தில் தெரியுமா? புகைப்படம் இதோ

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள் தான் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் ஜொலிக்க சின்னத்திரை கடந்த சில வருடங்களில் பெரும்பங்காற்றி வருகிறது. இந்த சின்னத்திரையிலிருந்து தமிழ் சினிமாவில்நைல் காமெடியனாக நுழைந்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் நடிகர் ரோபோ சங்கருக்கும் இடம் உண்டு.

   

தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பினையும் தவறவிடமால் தனது விடாமுயற்சியினால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் ரோபோ சங்கர். முதலில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரைபயனத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தனது உடல் பாவனைகளின் மூலம் காமெடி செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது மனைவி பிரியங்கா விஜய்யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றும் வருகிறார்.

ரோபோ ஷங்கரின் மனைவி இப்படி நிகழ்ச்சிகளை தாண்டி ஒரு படத்தில் சின்ன காட்சியில் வந்துள்ளார். இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா? ஆம் அவர் விக்ரம் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான தூள் படத்தில் ஒரு சின்ன காட்சியில் வந்துள்ளார். தூள் படத்தில் நடிகை லைலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என சமையல் நிகழ்ச்சியில் நடித்திருப்பார். அந்த காட்சியில் தான் ரோபோ சங்கரின் மனைவி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்திருப்பார்.