லாரிக்கு அடியில் மாட்டிய கன்று குட்டி, அதனை மீட்க தாய் பசு நடத்திய பாச போராட்டத்தைப் பாருங்க… சிலிர்த்திடுவீங்க…!

‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

   

எப்போதுமே தாய் பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், த.டை.யா.கவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய் பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இங்கேயும் அப்படித்தான். சாலையில் ஒரு லாரி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரியின் கீழ் பகுதியில் ஒரு கன்று குட்டி நுழைந்துவிட்டது. அந்த கன்றுகுட்டியால் முட்டி போட்டு உள்ளே சென்றதை போல, முட்டி போட்டு வெளியே வரத் தெரியவில்லை. இந்நிலையில் அந்த கன்றுகுட்டியை அந்தப் பகுதியில் இருந்து வெளியே மீட்டுவர தாய் பசு ரொம்பவே போராடியது.

ஆனால் பசுவால் மீட்க முடியவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் சேர்ந்து கன்றுக்குட்டியை மீட்க முயற்சித்தனர். ஆனால் அப்போதும் மீட்க விடாமல் பசு, தன் கன்றுக்குட்டியை அவர்கள் கொல்ல முயற்சிப்பதாக நினைத்துக்கொண்டு தடுத்தது. மேலும் அந்த கன்றுக்குட்டியை மீட்டுவிட வேண்டும் என்னும் தவிப்பில் லாரியையே சுற்றிவந்தது.

ஒருகட்டத்தில் தாய் பசுவை தடுத்து நிறுத்திவிட்டு, கன்றுக்குட்டியை காலின் முட்டியை மடக்கி வைத்து வெளியே இழுத்தனர். இதோ இது தொடர்பான வீடியோ.. தாய்ப்பசுவின் தாய்ப் பாசத்துடன் கூடிய தவிப்பை நீங்களே பாருங்களேன்..