வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை வரலட் சுமி சரத்குமார். இதைத்தொடர்ந்து, தாரைதப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்ட்டான கேரக்டரில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் சரியான பொருத்தமாக மாறிவிட்டது. சர்கார், விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

   

ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு கிடைக்காதா ரசிகர்களின் ஆதரவு, தற்போது தெலுங்கில் இவர் நடித்து வரும் படங்களுக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிரேக், நாந்தி என இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் வைத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் , சாந்தனு, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆடவைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் நடனமாடி வருகின்றனர். தற்போது பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடைய வேகமாக பரவி வருகிறது.