விமான நிலையத்தில் குடும்பத்துடன் தல அஜித்! வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் இன்று எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் வாரிசு நடிகர்களாக இல்லாமல் தனது முழு திறைமையை மட்டுமே வைத்து உயர்ந்த நடிகர்கள் என்று சொன்னால் அது ஒரு சில மட்டுமே. இப்படி தமிழ் சினிமாவில் மற்றவர்களைப்போல அல்லாமல் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே.

   

அமராவாதி படத்தின் மூலம் தமிழ் சினமாவிற்கு நுழைந்த இவருக்கு ஆரம்ப கால திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்று சொன்னாலும் போக போக பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் அடுத்து வெளிவந்த ஆசை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்துபட வாய்ப்புகள் குவிய தற்போது தமிழ் சினிமாவின் தவர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக வளர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி கேமரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார். இந்நிலையில் தல அஜித் தனது மனைவி, மகன், மகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் விமானநிலையத்தில் வந்து இறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.