வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி யாரு தெரியுமா? இந்த பிரபல நடிகரின் தம்பியா!! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் டேனியல் பாலாஜி. திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் டேனியல் பாலாஜியிடம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான முரளி உங்களுடைய அண்ணன் என்று சொல்கிறார்கள் இது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லையே என்று கேட்டுள்ளார். அதற்கு டேனியல் பாலாஜி கூறியிருப்பது நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.

நாங்க தெலுங்கு காரர். முரளி கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஆனால் என்னுடைய அம்மாவும், முரளி உடைய அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி என்னுடைய அண்ணன் என்று கூறினார். பசி, பட்டினி என அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தன்னுடைய திறமையால் திரையில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் டேனியல் பாலாஜி.