தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.
இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், ரசிகர்களிடயே நீ இன்னும் சின்ன பொண்ணுமா, இது மாறி புகைப்படங்கலாம் போட இன்னும் நாள் இருக்கு அப்படி இப்படி என அட்வைஸ் பெற்று வருகிறார். அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளாத அவர், தற்போது வெள்ளை நிற உடை அணிந்து ஏஞ்சல் போல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram