வொர்க் ப்ரம் ஹோமில் இந்த மனுஷன் படும்பாட்டைப் பாருங்க.. டேய் அப்பா பாவம்டா… வேலை முக்கியம்டா…!

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றின் முதல் அலையின் போதே கம்பெனிகள் அனைத்தும் வொர்ம் ப்ரம் ஹோம் நடைமுறையை அமல்படுத்தின. அது இப்போதும் தொடர்ந்து வருகிறது.

   

இதனால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அதிலும் வீட்டில் சின்னக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இதில் படும் சிரமம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர்களை குழந்தைகள் வேலையே செய்யவிடாமல் கடுமையாகத் தொல்லை கொடுத்துவருகின்றனர். அதிலும் அவர்களின் சேட்டைகளையெல்லாம் மீறி வொர்க் ப்ரம் ஹோமில் ஆபீஸ் வேலையை முடிப்பது என்பது ரொம்பவே சவாலான வேலை. அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொடியன் ஒருவன் தன் அப்பா லேப்டாப்பை ஒரு சின்ன டேபிளில் வைத்து வேலைசெய்வதைப் பார்த்தான். உடனே தன் கையில் இருந்த குதிரை பொம்மையை வைத்து விளையாட அதே டேபிளைக் கேட்டு லேப்டாப்பை தள்ளிவிட்டான். தொடர்ந்து, அவனது அப்பா, அந்த டேபிளைக் கொடுத்துவிட்டு வேறு ஒரு சேரைப் போட்டு வேலை செய்தார்.

அப்போதும் அந்த பொடியன் லேப்டாப்பை தள்ளிவிட்டு அந்த டேபிளைக் கேட்டான். ஒருகட்டத்தில் அவனது அப்பா செல்லமாக, ‘டேய் அப்பாவை வேலை செய்ய விடுடா..அப்போதாண்டா உனக்கு டயாபர் வாங்க வாச்சும் காசு இருக்கும்.’ என அவனிடம் கெஞ்சுகிறார். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.