ஹீரோவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சதீஷ்! தொடர்ந்து இரண்டு படங்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். ஆரம்பகாலங்களில் காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர். இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி பொய் வசனகர்த்தாவாக பணியாற்றினார். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகர்கள் வரிசையில் ஒருவராக திகழ்பவர் சதீஷ். கோலிவுட்டில் பிசியான நடிகராக இருக்கும் சதிஷுக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உருவாகி உள்ளது. இந்நிலையில் பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இன்னொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க சதீஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இதனால் ஒரே நேரத்தில் சதீஷ் இரண்டு படங்களில் ஹிரோவாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *