தமிழ் சினிமாவில் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே. அமராவாதி படத்தின் மூலம் தமிழ் சினமாவிற்கு நுழைந்த இவருக்கு ஆரம்ப கால திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்று சொன்னாலும் போக போக பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பில் அடுத்து வெளிவந்த ஆசை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தற்போது தமிழ் சினிமாவின் தவர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக வளர்ந்துள்ளார். கடையாக இவரின் நடிப்பின் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்று ஓடியது. இந்நிலையில் தற்போது தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கேமராவில் எப்போது சிக்க மாட்டார்.
தன்னுடைய பயணங்களை எப்போதும் தெளிவாக பிளான் செய்து செய்வார். தான் வெளியே வரும்போது தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். வலிமை படப்பிடிப்பிற்காக அஜித் ஹைதராபாத் சென்றது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அங்கு அவர் விடியற்காலை சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,