‘சாமி சாமி’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வாரிசு நடிகை… நடிகை ராஷ்மிகாவையே மிஞ்சிடுவாங்க போலயே…வைரல் வீடியோ இதோ…

நடிகை அதிதி சங்கர் புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை அதிதி சங்கர் இவர் இயக்குனர் சங்கரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் நடிகையாக நடிகை மட்டுமல்ல ஒரு மருத்துவரும் கூட. எம்பிபிஎஸ் படித்த இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரையுலகில் கால் பதித்துள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன்  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

   

நடிகையாக மட்டுமின்றி இப்படத்தில் ‘மதுரவீரன் அழகுல’ என்ற பாடலை பாடி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இதன் மூலம் அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகை அதிதி  சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்திலும் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில்  விருமன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை அதிதியும்  பிரபல நடிகை இந்திரஜா சங்கரும்  இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களால் வைரலாக்கப்பட்ட வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)