நடிகை நயன்தாராவை மிஞ்சும் அழகில் புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை… யார் தெரியுமா?… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான நடிகை அனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதைத் தொடர்ந்து ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை நயன்தாராவிற்கு மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை அனிகா. இவர் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அனிகா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அனிகா ‘நயன்தாராவை மிஞ்சும்  அழகில் இருக்கிறாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்….