பிட்னஸுக்கு வயது ஒரு தடை இல்லை…. மருமகள் மெச்சிய மாமியார்….. ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ…. இணையத்தில் செம வைரல்…!!!

ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 56 வயது உடைய பெண் ஒருவர் ஜிம்மில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

   

இதை பார்த்த பலருக்கும் பெரும் ஆச்சரியம்தான் .அதாவது 56 வயதான ஒரு பெண்மணி ஜிம்மில் அனைத்து ஒர்க் அவுட்டுகளையும் செய்கின்றார். இன்றைய காலகட்டத்தில் 40 வயது ஆனாலே தனக்கு வயதாகிவிட்டது என்று கூறி மூலையில் முடங்கி கிடக்கும் காலம் போய் தற்போது அனைத்து ஒர்க் அவுட்டுகளையும் செய்வதை பார்த்து பலருக்கு ஆச்சரியம் ஏற்படுகின்றது,

52 வயதில் தனது மருமகளுடன் ஜிம்முக்கு சென்ற அந்த பெண் சர்வ சாதாரணமாக ஒர்க் அவுட் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். ஜிம்முக்கு செல்வதை பின்னர் வழக்கமாக்கிக் கொண்ட அந்த பெண்மணி தற்போது செம பிட்டாக மாறியுள்ளார். சேலை கட்டிக்கொண்டு சர்வ சாதரணமாக அந்தப் பெண் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

சர்வ சாதாரணமாக அந்த பெண்மணி ஒர்க் அவுட் செய்வதை பார்த்த பலரும் வியந்து போய் உள்ளனர். மருமகளுடன் சேர்ந்து தினமும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறும் அந்த பெண்மணி உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வயது ஒரு தடை இல்லை என்கின்றார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…