10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்! படவாய்ப்புகள் இல்லாததால் ஏற்பட்ட சோகம்.. கண்கலங்கிய வடிவேலு

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில இருந்தவர் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. ஆனால் என்னவோ அவரை இப்போதெல்லாம் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லை. படங்களில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார் நகைச்சுவை நடிகை வடிவேலு. இந்நிலையில் தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார்.

   

அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்போது பேசிய வடிவேலு ‘நீங்கள் எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன். அதுமட்டுமில்ல வீட்டிலேயே முடங்கி கிடப்பது எனக்கு மரண வேதனையை கொடுக்கிறது என்று கண்கலங்கினார்.

என் உடம்பில் இப்போதும் தெம்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை.’ என பேசினாராம். அதே போல சோகத்தோடு கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் மீண்டும் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க போகிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.