ஜிம்பாப்வேயில் 66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro 16 பெண்களை திருமணம் செய்து, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார்.
இதை அவர் பலதார மணம் திட்டம் என்று கூறுகிறார். ஒவ்வொரு இரவும் 4 மனைவுகளுட்ன் தங்கி வரும், இவர் அவர்களை திருபதிபடுத்துவது தான் தன்னுடைய முழு வேலை என்கிறார்.
66 வயதான போதும், இந்த இளைய பெண் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் ஆசைப்படுகிறேன். ஏனெனில், என்னுடைய மனைவிகள் பெரும்பாலானோருக்கு வயதாகிவிட்டது. என்னிடம் இருக்கும் குழந்தைகள் 14 கால்பந்து அணிக்கு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.
அவர்கள் எனக்கு தேவையான அனைத்தும் செய்கின்றனர். மனைவிகள் ஒவ்வொருவரும் தன்னுடைய விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்து வருகின்றனர். எனக்கு என்று இப்போது எந்த ஒரு திட்டமும் இல்லை.
ஆனால் 100 மனைவிகளுடன் 1000 குழந்தைகளை பெற வேண்டும் என்று நினைக்கிறேன் 1983 ஆம் ஆண்டில் நான் ஆரம்பித்த இந்த பலதார மண திட்டத்தை, நான் இறக்கும் வரை விடமாட்டேன். இத்தனை குழந்தைகள், மனைவிகள் இருந்த போதிலும், எனக்கு எந்த ஒரு நிதிச்சுமையும் ஏற்பட்டதில்லை,
அதை நான் உணரவும் இல்லை. என் குழந்தைகள், வளர்ப்பு மகன்கள் என அவர்கள் எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து வருகின்றனர். என் மனைவிகள் ஒவ்வொருவரும் தினமும் எனக்கு சமைக்கிறார்கள்,
ஆனால் நான் ருசியான உணவை மட்டுமே சாப்பிடுவேன். நன்றாக இல்லாத உணவை அப்படியே தூக்கி எறிந்துவிடுவேன். இரவு நேரத்தை பொறுத்தவரை நான் ஒரு அட்டவணை வடிவமைத்து வைத்துள்ளேன்.
அதன் படி ஒவ்வொரு இரவு நான்கு மனைவிகளுடன் இருப்பேன். படுக்கையறையில் எனது ஒவ்வொரு மனைவியின் வயதுக்கும் ஏற்றவாறு எனது நடத்தையை நான் மாற்றிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறும் இவர், தன்னுடைய வயதான மனைவிகள் உடல் அளவில் நெருக்கம் இல்லாம, அவர்களிடம் ஆர்வம் இல்லை என்று குறை கூறுகிறார். இருப்பினும், தனது மனைவிகள் அனைவருடனும், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி முடித்தார்.