
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் சிம்பு – 48 என்ற படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம், கதை, பாடல்கள் எழுதுவது மற்றும் பாடுவது, இசையமைப்பது, திரைக்கதை எழுதுவது என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்ற கூடிய திறமை கொண்டவர். அவ்வப்போது இவரின் திருமணம் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவருடைய தங்கை தான் மதுரா, சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழும் இவர், நடிகர் சிம்பு குறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
அதில் நான் பள்ளி படிக்கும் போதே, டிவியில் சிம்புவின் பாடலை பார்த்ததிலிருந்து சிம்பு மேல் எனக்கு ஒரு கிரஸ் எனவும், அப்போதிலிருந்து அவரை ஒருதலையாக காதலித்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார். எனவே சிம்புவை நேரில் பார்த்தால் ப்ரொபோஸ் செய்து விடுவதாகவும், மதுரா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.