அஞ்சாதே படத்தில் வில்லனால் கடத்தப்பட்ட 2சிறுமிகள்.. பிரபல நடிகைகளா..! வெளியான சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அதிரடி திரைப்படம் வெளியான படம் அஞ்சாதே. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படமானது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா, நரேன் நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தனர்.

   

இந்த திரைப்படத்தில் கிளைமாக்சில் பிரசன்னா 2 பள்ளி குழந்தைகளை கடத்தி வைத்து இருப்பார். அந்த குழந்தைகள் இருவரும் நிஜத்திலும் அக்கா ,தங்கை என்பதும் பிரபல நடிகைகளாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி தான். அதே போல இன்னோரு பெண் அவரது அண்ணி சோபியாவின் உடன் பிறந்த அக்கா தான் என்பது தெரியவந்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் வேற யாரும் இல்லை பிக் பாஸ் போட்டியாளர்களில் கலந்து கொண்டு பிரபலமான மணிகண்டன். இவரது மனைவி தான் சோபியா. இந்த அக்கா தங்கை நடிகைகள் ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தில் திவ்யா, நதியா என்ற இரண்டு கேரக்டர்களில் நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.