மனிதனால் படைக்கப்பட்டதும் இயற்கையான முறையில் உருவானதுமான கலைபடைப்புக்களே இன்று உலக அதிசயமாக சித்தரிக்கப்படுகிறது.இன்று உலகில் காதலர்களின் அடையாள சின்னமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாக காணப்படும் தாஜ்மகால் 22000 கைகளை இழக்க செய்தது என இதுவரைக்கும் யாருக்குத் தெரியும்?முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.
ஏழு உலக அதிசயங்களின் பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது முகலாய மன்னனான ஷாஜகனால், இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 24 வருடங்களுக்குள் இடையில் கட்டிமுடிக்கப்பட்டது ஷாஜகானின் 3வது மனைவி மும்தாஜ் தான் பெற்ற 14வது மகனின் இ றப்பால் மனமுடைந்து தானும் இ றந்து விட்டதாலும் இறந்த தன் மனைவியின் நினைவாகவே தாஜ்மகாலை கட்டியதாக பழங்கதைகள் கூறப்படுகின்றது இதன் கட்டிட வேலைகள் மிக வித்தியாசமானதாகவும் வினோதமானதாகவும் காணப்படுகிறது…தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கைலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும் கட்டப்பட்டுள்ளது.
தனது மனைவிக்காக உருவாக்கப்பட்ட இந்த பளிங்கு மாளிகையின் அழகுக்குப் பின்னால் எத்தனை பேரது அ ழுகைகளும் எத்தனை குடும்பங்களின் சாபங்களும் இருக்கும் நினைத்துப் பார்த்தாலே கண்களில் க ண்ணீர் நிரம்பி வழிகிறது.ஆனால் இந்த உண்மை இங்கு எத்தனை பேருக்கு தெரியும்????????