
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளவில் ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்தனர். மேலும் அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்து, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. மேலும் இப்படம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளிலும் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி, புதிய சாதனைகளையும் படைத்தது.
இந்நிலையில் தற்போது ரஜினி ஞானவேல் ராஜா இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினையடுத்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. எனவே ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், இதோடு ஆறாவது முறையாக நடிகர் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார், அண்ணாத்த என ஐந்து முறை என நடிகர் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.