90களின் பேவரெட் ஆனந்த கண்ணன் என்ன ஆனார்? மீண்டும் தொலைக்காட்சியில் ரீஎன்ட்ரியா! எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது. ஆனால், போதிய டெக்னாலஜி வளர்ச்சி இல்லாதா காலம், சமூக வலைத்தளங்கள் என்றால் என்னனு கூட தெரியாத காலத்திலையே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன்.

   

சிங்கப்பூரில் உள்ள தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் டிவியில் பணிபுரிந்த இவர் பின் சென்னை வந்தார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக கலக்கி வந்தார். அவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றது. சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும்.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஆனந்த கண்ணன் சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவரை தொலைக்காட்சி பக்கமே காணவில்லை, ஆனால் இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். D தமிழ் டிவியில் ஆனந்த கண்ணன் சுவை என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.