அம்மாடி… இவ்வளவா?… நடிகர் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?…  கேட்ட ஷாக் ஆயிடுவீங்க….

நடிகர் சிவகார்த்திகேயன் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது அயராத உழைப்பால் இந்நிலையினை எட்டி உள்ளார் என்றால் அது மிகை ஆகாது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கினார். தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

   

இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம்.

இதைத் தொடர்ந்து டாக்டர், டான் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் எதிர்பாத்தளவிற்கு வெற்றியை பெறவில்லை. தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இவர் பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு என அனைத்தும் இதில் அடங்கும்.

அதே போல் சிவகார்த்திகேயன் கருப்பு கலர் ஆடி கார் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூபாய் 105 கோடிக்கு மேல் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.