சீரியல் நடிகை பிரவீணாவின் பலரும் பார்த்திடாத குடும்ப புகைப்படங்களின் தொகுப்பு ..

தமிழ் சின்னத்திரை சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரவீணா பிரமோத்.

   

இவரது தந்தை ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவர் கேரளாவை சார்ந்தவர். தனது 18 வயதிலிருந்து நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து உள்ளார்.தமிழ் டிவியான சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள்,மகராசி சீரியல் நடித்து பிரபலமானார்.

விஜய் டிவியில் ‘ராஜா ராணி சீசன் 2’ அம்மாவாக நடித்தார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகை மட்டுமல்ல நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட.

பல்வேறு வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.நடிகை பிரவீணா   தமிழ் சீரியல் நடித்தது மூலமாக,

தமிழில் சினிமாவில்   தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, சாமி 2,என பல  படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை பிரவீணா துபாயில் வேலை செய்து கொண்டிருந்த பிரமோத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் பிரவீணா.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.தற்போது இவரின்   குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.