இசைஞானி இளையராஜாவின் பலரும் பார்த்திராத.. இளம் வயது புகைப்படங்களின் தொகுப்பு…

தமிழ் சினிமா பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இளையராஜா. இவர் ஜூன் 2  தேதி 1943  ஆம் ஆண்டு பிறந்தார்.

   

 

இவர் சிறு வயதிலிருந்து ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

 

இவர்  1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தில் எஸ் ஜானகி அம்மா பாடிய ‘மச்சான பாத்தீங்களா’ என்ற பாடலுக்கு இசையமைத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

 

இதை தொடர்ந்து 16 வயதினிலே ,பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற பல படங்கள் நாட்டுப்புற மனம் கலந்து  இசையமைத்தார்.

 

இளையராஜாவுக்கு மறைந்த  மு.கருணாநிதி அவர்களால்  இசைஞானி என்று பட்டம் சூட்டப்பட்டது.

 

இவர் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களை ஏற்றியுள்ளார். 1000 மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை வழங்கியுள்ளார்.

 

சந்தோசம், கொண்டாட்டம் ,வருத்தம் எந்த  உணர்ச்சியில் இருந்தாலும் அப்போது இவரது பாடலை கேட்காத மக்களே இருக்க மாட்டார்கள்.

 

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசை புலமை பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

 

இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி போ ன்ற பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

 

 

2018 இல் இந்தியாவில் இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம பூஷன்விருதை பெற்றார்.இவரை அனைவரும் இசைஞானி இளையராஜா என்று தான்  அழைப்பார்கள்.

 

இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் ,யுவன் சங்கர், பவதாரணி என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மகள் பவதாரணி உடல்நன குறைவால் 25 ஜனவரி 2024 காலமானார். தற்போது யாரும் பார்த்திடாத இவரது  இளமையில் எடுத்த புகைப்படமானது  இணையத்தில் வெளியாகிய வருகிறது.