பெற்றோரை ஒதுக்கிவிட்டு தனிமையில் காதல்..சில்க் ஸ்மிதா இறப்பில் மர்மம்.. உண்மை உடைத்த பிரபல நடிகை…

80s  மற்றும் 90ஸ் களின் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்களின் கனவுகனியாக வலம் வந்தார் . இவர் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு தனது 35 வயதில் காலமானார்.அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பும் மற்றொரு பக்கம் இவர் சாவில் மர்மம் இருப்பதாகவும் என இரு வதங்கள் நடந்தனர்.

   

இந்நிலையில் சில்க் ஸ்மிதா மரணம் குறித்து கவர்ச்சி நடிகையான ஜெயமாலினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் குறுகிய காலத்திலேயே பெரும் பணம் புகழும் சம்பாதித்தவர் தான் சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பு அரங்கில் எங்களுடன் அவர் பேச மாட்டார். ஒரு படத்தின் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் ஸ்மிதா என  மூவரும் நடித்திருக்கிறோம்.

நல்ல நிலையில் இருந்தும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.சில்க் ஸ்மிதா வாழ்க்கை செய்த பெரிய தவறு செய்தாக கூறியுள்ளார். அதில் அவர் காதலிக்கலாம் தவறில்லை ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைத்து காதலிக்கக் கூடாது. அவர் தனது சகோதரரையும் ,தாயையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார்.

உறவினர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டால் பாதி அவர்கள் தின்றாலும் கொஞ்சம் நமக்கு வைப்பார்கள். ஆனால் ரத்த பந்தம் இல்லாதவர்களை வைத்துக் கொண்டால் அதுவும் நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்களுக்கு தெரிந்தால் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் சுமிதாவும் பலியாகிவிட்டார் என்று கூறியுள்ளார்.