
சீரியல்களுக்கு என்று பெயர் போன டிவி தான் சன் டிவி. சன் டிவி ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.சமீபத்தில் அந்த சீரியல் முடிந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்னும் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.அதில் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்கும் போது ராகுல் என்பவரை காதலை இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை மலேசியாவில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் அந்த திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரியங்கா சீதா ராமன் சீரிலிருந்து மொத்தமாக விளக்கினார். தனது கணவர் மலேசியாவில் இருப்பதாகவும் இதனால் எனக்கும் அவருக்கும் சில இடைவெளிகள் இருக்கின்றது. அதனாலயே நான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று காரணமும் கூறினார்.
அதன் பிறகு ஜீ தமிழில் மீண்டும் நளதமயந்தி என்னும் தொடரில் கதாநாயகியாக நடிக்க முன்வந்த பிரியங்கா.அதே சமயத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்து நீக்கிவிட்டார் அதேபோல அவர் கணவரும் அனைத்தையும் டெலீட் செய்து விட்டார்.
இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என்ற கேள்வி எழுப்பிய நிலையில் , ரசிகர் ஒருவர் சிங்கிளா என்று கேட்ட கேள்விக்கு இவர் அளித்த பதில் ஆனது இருவருமே பிரிந்து விட்டார்கள் என்பது போல் தான் தெரிகிறத .அதற்கான காரணத்தையும் நடிகை பிரியங்கா இன்னும் கூறவில்லை. அது மட்டுமல்லாமல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுகிறேன் என்றும் தகவலை கூறியுள்ளார்.