
பொதுவாக நம்ம எல்லோரும் சிறுவயதில் டைம் டிராவல் கதைகள் பற்றி அதிகமாக பார்த்துள்ளோம் அது உண்மையோ என்று நம்ப வைக்கும் அளவு ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை பற்றி தான் நாம் இப்போது இந்த பதிவின் மூலம் விவரிக்க உள்ளோம்.
2023 ஆம் ஆண்டு பிறந்து இருபத்தி மூன்று நிமிஷம் கழிச்சு தென்கொரியா நாட்டிலிருந்து யூனிட் என்ற விமானம் அமெரிக்காவை நோக்கி சென்றது. தென் கொரியா நாட்டின் நேரம் அப்போது 12 மணி 49 நிமிடம் இந்த விமானம் மொத்தமாக 9 மணி நேரம் பயணம் செய்து அமெரிக்க நாட்டிலுள்ள சான்பிரான்சிஸ்கோ என்னும் இடத்தை அடைந்தது.
ஆனால் இந்த சமயத்தில்தான் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வண்ணம் பைலட் நேரம் இப்போது டிசம்பர் 31-ஆம் தேதி சாயங்காலம் 5 மணி என்று தன் ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
இதனை பார்த்த சக பயணிகள் நாம் என்ன டைம் ட்ராவல் செய்து விட்டோமோ என்று குழம்பிப் போயிருந்தனர் ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் ஆசியாவை விட அமெரிக்க நேரம் 23 மணி நேரம் பின்தங்கியே உள்ளது.
அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இந்த விமானம் பயணம் மேற்கொண்டதே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.இந்த நிகழ்வை முழுமையாக விளக்கும் வண்ணம் சில வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக….