‘பாண்டவர் பூமி’ படம் முதல் ‘மௌனராகம்’ சீரியல் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஷமிதாவின் குடும்ப புகைப்படம்…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்த  மௌனராகம் சீரியலில் காதம்பரி  கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தவர்  தான் ஷமிதா ஸ்ரீ குமார்.

   

இவர் முதலில் ‘பாண்டவர் பூமி’ என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் ‘தோழா தோழா தோள் கொடு கொஞ்சம்  சாஞ்சிக்கணும்’ என்ற பாடல் மக்கள் மத்தியில் மிக பிரபலமானது.

இதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் கன்னடத்தில் கால்பதித்து இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்தார்.

அதன் பின் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிவ சக்தி’ சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் தனது காலடியை பதித்தார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு  விஜய் டிவியில் ஒளிபரப்பான  ‘மௌன ராகம் சீசன் 1’ தொடரிலும், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதை தொடர்ந்து அவருடன் இணைந்து நடிக்கும்  நடிகர் ஸ்ரீகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் தங்களின்  பெற்றோர் சம்மதத்துடன் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.

இவருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சீரியலில் வில்லியாக நடிக்கும் இவர்  நிஜத்தில் மிகவும் அன்பானவராம், மிகவும் மென்மையானவராம்.

இவருக்கு நீலம், பச்சை நிற உடைகளை அணிய மிகவும் பிடிக்குமாம்.  ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘யாரடி நீ  மோகினி’ என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் இவர் கணவர் .

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.